Sale Date Ended
அன்பான ஐதராபாத் வாழ் தமிழ் நெஞ்சங்களே! வணக்கம்!!
தங்கள் அனைவரின் மேலான வேண்டுகோளை ஏற்று நமது ஐதராபாத் தமிழ் நண்பர்கள் குழு சார்பாக முதலாவது மாபெரும் சந்திப்பு நிகழ்ச்சி கார்த்திகை மாத வனபோஜனம் நிகழ்வாக "புறமனை விருந்து" வரும் நவம்பர் 24-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் சீரும் சிறப்புடன் நடைபெற உள்ளது.
தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த நிகழ்வில் பெருமளவில் பங்கு கொண்டு மகிழுங்கள்.
தமிழ் குடும்பங்கள் அனைவரையும் சந்தித்து பேசி மகிழ ஓர் அறிய வாய்ப்பு.
குழந்தைகள், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள்! சிரித்து மகிழ நகைச்சுவை நிகழ்ச்சிகள்! உண்டு மகிழ சுவையான உணவு வகைகள்!
வாருங்கள் விளையாடலாம்!
இன்றே உங்கள் வருகையைப் பதியு செய்து, தவறாமல் கலந்து கொண்டு மகிழ வேண்டி
உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். குதூகலம் ஆரம்பம் ஆகட்டும்!
தேதி: நவம்பர் 24, 2019 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை
இடம்: Dholari Dhani, Kompally
கட்டணம்: ஒரு நபர்க்கு ரூ. 300/- ( நுழைவு கட்டணம், தேனீர், இரவு அறுசுவை உணவு உட்பட)
(Inclusive of Entry ticket, Tea, Dinner)