Book Online Tickets for Kanavu Meipada, Madurai. கனவு மெய்ப்பட உதவுகிறது, இன்னோவேடிவ் நிறுவனம்!*
 
*“ந*ல்ல திறமைகள் இருந்தும், சரியான வழிகாட

Kanavu Meipada

 

About The Event

கனவு மெய்ப்பட உதவுகிறது, இன்னோவேடிவ் நிறுவனம்!*

 

*“ந*ல்ல திறமைகள் இருந்தும், சரியான வழிகாட்டல் இல்லாமலும், ஆலோசனை கேட்க ஆட்கள் இல்லாததாலும், தகுதியான இடத்தை அடையாமல் இருக்கிறார்கள் பலர். இவர்களின் கனவுகளை அடையாளம் கண்டு இலக்கை அடைய உதவுவதே எங்கள் பணி!’’

 

சென்னையில் முதல் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு, தமிழகத்தின் இதயமாக விளங்கும் மதுரையில் களமிறங்க இருக்கிறது இன்னோவேடிவ்.
‘‘பல்துறை வெற்றியாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு இளைய தலைமுறைக்கு, ஆலோசனை வழங்கும் அற்புத வாய்ப்பு இந்த நிகழ்ச்சி.

 

‘மலை என்பது மிகப் பெரிய கல். அதேபோன்று, கல் என்பது சிறிய மலை!’ என்பதை பகுத்து உணரத் தெரிந்து கொண்டால், வாழ்க்கையில் வெற்றி எப்போதும் சாத்தியம். இதை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை இதுபோன்ற பயிற்சி அரங்கில் மட்டுமே பெற முடியும். அடுத்தவர் அனுபவம் என்பது நமக்கு எளிதாகக் கிடைக்கும் வெற்றிப்படி அல்ல... எஸ்கலேட்டர்!

 

‘கனவு மெய்ப்பட..!’ இரண்டாவது பயிற்சி அரங்கம் பிப்ரவரி 24 ஆம் தேதி (சனிக்கிழமை) மதுரை காமராஜர் சாலையில், பிக் சினிமாஸ் அருகில் உள்ள வி.எஸ். செல்லம் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முனைவர் பர்வீன் சுல்தானாவும், நமது நம்பிக்கை மாத இதழின் ஆசிரியரும், தன்முனைப்புப் பேச்சாளருமான மரபின் மைந்தர் முத்தையாவும் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் முன்னணி நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்று சிற்றுரை ஆற்றவும் உள்ளனர்.

 

எதிர்கால வேலை வாய்ப்பு குறித்து அறிய ஆர்வம் கொண்டோர், வேலை தேடுவோர், சிறப்பான பதவி உயர்வை நாடுவோர், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர், தொழிலில் ஈடுபட்டு அடுத்தகட்ட வளர்ச்சிக்கான தேடலில் இருப்போர்... எனப் பலருக்கும் பயன்படும் இந்தப் பயிற்சி அரங்கம்.

 

இந்த அரங்கம் குறித்த விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 7338863608/9940076608/9840346608 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

இந்த புதுமையான பயிற்சி அரங்குக்கு வாருங்கள். உங்கள் கனவையும் மெய்யாக்குங்கள்!

 

Invite friends

Contact Us

Page Views : 30

More Events From Same Organizer

Similar Category Events