Members - PMI Chennai Chapter
Sale Date Ended
Non-Members
Sale Date Ended
Sale Date Ended
நிகழ்வைப் பற்றி:
திட்ட மேலாண்மை நிறுவனத்தின் சென்னை கிளை, தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய திட்ட மேலாண்மை இணையவழி மாநாடான #சங்கமம்20க்கு உங்களை அன்புடன் அழைக்கிறது.
இது எங்களின் 9 ஆவது வருடாந்திர மாநாடாகும். இந்த வருடம் முதல் முறையாக, தமிழில் இந்த மாநாட்டை நடத்த முயற்சிக்கிறோம். தமிழகத்தின் பல பகுதிகளிலுள்ள பயனாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், தொண்டு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் திட்ட மேலாண்மையின் நன்மைகளையும், பலன்களையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.
திட்ட மேலாண்மையைப் பற்றி அறிய மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, எங்களின் முதல் முயற்சியாக “திட்டமிடு! வெற்றி தொடு!” என்ற புத்தகத்தை இந்த ஆணடு வெளியிட்டோம். அதன் தொடர்ச்சியாக இந்த மாநாடும் அதே தலைப்பைக் கொண்டு நடைபெறும்.
இது ஒரு இணையவழி நிகழ்வாக டிசம்பர் 11th மற்றும் 12th, 2020 (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் இந்த மாநாட்டைப் பற்றி இன்னும் பல தகவல்களை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமும். சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரிவிக்கிறோம்.
வாழ்க்கையில் நாம் செய்யும் எந்தவொரு பணியிலும் திட்டமிடல் ஒரு முக்கியமான படியாகும். இந்த மாநாட்டை உலகுக்கே ஒரு முன்மாதிரி மாநாடாக ஆக்க நாங்கள் திட்டமிட்டு உழைத்து வருகிறோம். உங்களின் ஆதரவுடன் மட்டுமே இது சாத்தியமாகும். எங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்கள் அளிக்கும் ஆதரவே எங்களின் உந்து சக்தி. எப்போதும் போல இந்த முயற்சிக்கும் உங்களின் ஆதரவை வேண்டுகிறோம்.
மகிழ்ச்சி
About the event:
PMI Chennai Chapter cordially invites you to #Sangamam20 (9th Annual Conference), the world’s largest project management Tamil conference (virtual).
Planning is an important step in any task we do in our life and language should not to be a barrier to learning about project management. Our first attempt was releasing project management book in Tamil titled “Thittamidu Vettri Thodu” earlier this year.
In continuation of that endeavour, for the first time we are conducting this conference in Tamil. The aim is to take knowledge and benefits of project management to Tamil speaking Project Managers, activists, charities, teachers and students located across Tamil Nadu.
The theme of the conference is Plan and Succeed (திட்டமிடு வெற்றி தொடு). #Sangamam20 is scheduled to be held on December 11th and 12th, 2020 (Friday & Saturday), as “Virtual Event”. The conference will host eminent speakers who can deliver the essence of Project Management in Tamil.
Members of Project Management Institute (PMI) who are holding PMI Credentials will be awarded 6 PDUs for attending this event. You will get more information on the conference in coming days via mail and social media links.
We are putting our best efforts to make this conference a unique, special and fruitful for all the delegates. Your support for our every endeavour is our driving force and looking forward to your participation in #Sangamam20.
Cheers
For more details, please visit http://pmichennai.org/sangamam/